Anika Legal will be closed for the holiday season from வெள்ளி 20th டிசம்பர் 2024, and will reopen on திங்கள் 6th ஜனவரி 2025. We wish you a safe and happy holiday season!

வாடகை விதிமுறைகள் சொற்களஞ்சியம்

By Anika Legal | Tue 6th Dec. '22

We are currently looking for feedback on our Chinese translations (with a chance to be in the running to win a $50 gift card!) If you can read Chinese, please toggle to our Chinese pages and fill in this feedback form!

alif-caesar-rizqi-pratama-loUlSOXL81c-unsplash

சொற்களஞ்சியம்

  • நிலுவைத் தொகை (Arrears): நிலுவைத் தொகை என்பது நில உரிமையாளருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணம் ஆகும் - இதில் வாடகை மற்றும் இதர வகை நிலுவைத் தொகைகள் (செலுத்தப்படாத கட்டணங்கள் போன்றவை) அடங்கும். வாடகை நிலுவைத் தொகை என்பது நீங்கள் ஓர் இடத்தில் வசித்த காலத்திற்கு நீங்கள் செலுத்தாத வாடகை ஆகும். (கீழே கொடுக்கப்பட்டுள்ள “வாடகை” என்பதைப் பார்க்கவும்)

  • பத்திர / பிணை வைப்புத்தொகை (Bond/security deposit): இது நீங்கள் ஒரு வீட்டில் குடியேறும்போது அந்த நில உரிமையாளருக்கு நீங்கள் வழங்குகின்ற கூடுதல் தொகை ஆகும். நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உங்களால் ஏற்படும் சேதங்களுக்கு, அல்லது உங்கள் குத்தகைக் காலத்தின்போது நீங்கள் செலுத்தத் தவறிய வாடகைத் தொகைக்கு இதிலிருந்து ஈடு செய்யப்படும். நீங்கள் வீட்டைக் காலி செய்யும் வரை குடியிருப்பு வாடகைப் பத்திர ஆணையம் (RTBA) இந்தப் பணத்தைத் தன் வசம் வைத்திருக்கின்றது. வீட்டைக் காலி செய்யும்போது சாதாரணமாக ஏற்படும் தேய்மானத்தைத் தவிர பிற சேதங்கள் அல்லது பழுதுகளுக்குக் கட்டணம் வசூலிக்க உங்கள் நில உரிமையாளர் முடிவுசெய்யாவிட்டால் அந்தப் பணம் முழுமையாக உங்களுக்கு திருப்பித் தரப்படும். பத்திரம் தொடர்பாக ஏதாவது தகராறு ஏற்பட்டால், VCAT அதைப் பற்றி விசாரணை செய்ய முடியும்.

  • சி ஏ வி (CAV): விக்டோரியா நுகர்வோர் விவகாரங்கள் (Consumer Affairs Victoria) என்பது நில உரிமையாளர்கள், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், வணிகங்கள் மற்றும் பொதுவாக நுகர்வோருக்கான ஒரு நியாயமான சந்தையை உறுதிசெய்கின்ற விக்டோரியாவின் நுகர்வோர் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.  

  • இணைக் குடியிருப்பாளர் (Co-tenant): வாடகைக் குடியிருப்பு ஒப்பந்தத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கையொப்பம் இடும்போது, அவர்கள் இணைக் குடியிருப்பாளர்கள் எனப்படுகின்றனர்.

  • காலி செய்தல் (Eviction): காலி செய்தல் என்பது வீட்டின் உரிமையை மீண்டும் பெற உதவுமாறு வீட்டின் உரிமையாளர் VCAT-ஐ கேட்டுக்கொள்ளும் செயல்முறையின் முடிவு ஆகும். உடைமைக்கான உத்தரவை வாங்க நில உரிமையாளருக்கு உரிமை அளிக்கின்ற குத்தகை உடைமை உத்தரவை VCAT உருவாக்கலாம்.

  • நிலையான கால ஒப்பந்தம் (Fixed-term agreement): ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கான (வழக்கமாக 6 அல்லது 12 மாதங்கள்) குத்தகையில் நீங்கள் பங்குகொள்ளும்போது நில உரிமையாளருடன் ஒரு நிலையான கால ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இந்தக் காலத்தின்போது, நீங்கள் ஒப்பந்தத்தை மீறவில்லை எனில் வீட்டைக் காலி செய்யுமாறு நில உரிமையாளர் உங்களிடம் கோர முடியாது.

  • குத்தகை / வாடகை / குடியிருப்பு வாடகை ஒப்பந்தம் (Lease/Tenancy/Residential tenancy agreement): இந்தச் சொற்கள் அனைத்துமே வாடகைதாரர்களுக்கும் அவர்களுடைய நில உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்தைக் குறிக்கின்றன. ஓர் ஒப்பந்தமானது, வாடகைதாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய, வாடகை எவ்வளவு, ஒப்பந்தம் எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாகும் போன்றவை உள்ளிட்ட உரிமைகளையும் கடமைகளையும் பற்றி விளக்கிக் கூறுகின்றது.

  • காலி செய்வதற்கான அறிவிப்பு (Notice to Vacate‍): இது வீட்டைக் காலி செய்யுமாறு கேட்டு வாடகைதாரருக்கு நில உரிமையாளர் வழங்குகின்ற ஒரு முறையான எழுத்துப்பூர்வ ஆவணம் ஆகும். இதில் வாடகைதாரர் காலி செய்ய வேண்டும் என நில உரிமையாளர் விரும்புவதற்கான காரணம் மற்றும் காலி செய்வதற்கு வாடகைதாரருக்கு எவ்வளவு நாள்கள் அவகாசம் உள்ளது ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

  • காலமுறை வாடகை ஒப்பந்தம் (Periodic tenancy): வாடகை ஒப்பந்தத்திற்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படாதபோது, அல்லது நிர்ணயிக்கப்பட்ட குத்தகைக் காலம் காலாவதியானவுடன் குத்தகையை நீங்கள் தொடர விரும்பும்போது இது மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு வாடகைதாரர் எழுத்துப்பூர்வமாக 28 நாள்கள் முன்னறிவிப்புக் கொடுப்பதன் மூலம் காலமுறை வாடகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள முடியும்.

  • வாடகை (Rent): இது வாடகைக்கு விடப்படும் வீட்டிற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும். வாடகை தினசரி அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது மற்றும் வழக்கமாக 1 மாத வாடகை முன்பணமாகச் செலுத்தப்பட வேண்டும். 

  • வாடகைதாரர் (Renter): வாடகைக்குக் குடியிருப்பவர் (tenant) எனவும் அழைக்கப்படுகிறார். இவர் நில உரிமையாளருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர் ஆவார்.

  • நில உரிமையாளர் (Landlord): வாடகைக்கு விடுபவர் (rental provider) எனவும் அழைக்கப்படுகிறார். ஒரு வாடகைதாரருடனான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சொத்தினை வாடகைக்கு விடுகின்ற நபர் அல்லது நிறுவனம்.

  • உள்வாடகைக்கு விடுதல் (Sub-letting): குத்தகை யார் பெயரில் இருக்கின்றதோ அந்த நபர் மற்றொரு நபருக்கு குறைந்த காலத்திற்கு வாடகைக்கு விடுதல் ஆகும். சட்டப்பூர்வமாக, நில உரிமையாளரின் முன் அனுமதி இல்லாமல் ஒரு வாடகைதாரர் உள்வாடகைக்கு விட முடியாது.

  • துணை வாடகைதாரர் (Sub-tenant): ஒரு வாடகைதாரரிடம் இருந்து (இவர் நில உரிமையாளரிடம் இருந்து வாடகைக்குப் பெற்றவர்) ஒரு வீட்டை, அல்லது வீட்டில் உள்ள அறையை வாடகைக்கு எடுக்கின்ற மற்றொரு நபர். சட்டப்பூர்வமாக, நில உரிமையாளரின் முன் அனுமதி இல்லாமல் ஒரு வாடகைதாரர் உள்வாடகைக்கு விட முடியாது.

  • குத்தகையை பெயர் மாற்றம் செய்தல் (Transfer of tenancy): குடியிருப்பு வாடகை ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபர் அந்த வீட்டில் வாடகைதாரராக தனக்கு உள்ள உரிமைகளை மற்றொரு நபரின் பெயருக்கு மாற்றும் ஆவணத்தில் கையொப்பம் இடும்போது இது நிகழ்கின்றது.

  • VCAT: விக்டோரியன் உரிமையியல் மற்றும் நிர்வாக தீர்ப்பாயம் (Victorian Civil and Administrative Tribunal). VCAT வாடகைதாரர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையிலான குடியிருப்பு சார்ந்த தகராறுகளைக் கையாளுகின்றது. இது சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு தீர்ப்பாயம் ஆகும். 

Anika Legal பின்வரும் நிகழ்வுகளில் சட்ட ரீதியான உதவி வங்க முடியும்:

  • உங்கள் வீட்டில் பழுதுபார்ப்பு மேற்கொள்ள வேண்டியிருந்து நீங்கள் இதுவரை VCAT-க்கு விண்ணப்பிக்காமல் இருந்தால்
  • வாடகை நிலுவைகள் காரணமாக காலி செய்யும் அறிவிப்பை நீங்கள் பெற்றிருந்தால்
  • உங்கள் நில உரிமையாளர் VCAT-க்கு விண்ணப்பித்த பிறகு பத்திரத் தொகை தகராறு காரணமாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்.

நீங்கள் தகுதியுடையவரா எனப் பார்க்க எங்கள் 10-நிமிட கேள்விப்பட்டியலை பூர்த்தி செய்யவும்.

We last updated this page in March 2022. Please remember that this is only legal information. If you're thinking about taking action, you should chat to a lawyer for advice about your situation first.

How useful was this content?