வாடகை வீட்டின் பழுதுபார்ப்பு உரிமைகள்

By Anika Legal | Fri 9th Dec. '22

உங்கள் வீட்டின் பழுதுபார்ப்புகளை முடிக்குமாறு உங்கள் நில உரிமையாளரிடம் நீங்கள் எப்போது கேட்க முடியும் என்பதை அறிந்துகொள்வது உங்கள் வீட்டினை நீங்கள் வசிப்பதற்குப் பாதுகாப்பானதாகவும் பத்திரமானதாகவும் மாற்ற முடியும். இந்த வலைப்பதிவு ஒரு வாடகைதாரராக பழுதுபார்ப்பதற்கு உங்களுக்கு உள்ள உரிமைகளைப் பற்றி சுருக்கமாகக் கூறுகின்றது.

பழுதுபார்ப்புகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டுமா?

வீடு நல்ல தரத்துடன் இருப்பதை உறுதிசெய்ய வாடகைதாரர் மற்றும் நில உரிமையாளர் இருவருமே பொறுப்பேற்க வேண்டும். வீட்டில் வசிக்கும் காலத்தில் வீட்டினைக் கவனித்துக்கொள்ள வேண்டியது வாடகைதாரரின் பொறுப்பாகும், அதே நேரத்தில் வீடு நன்றாகப் பழுதுபார்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டியது நில உரிமையாளரின் பொறுப்பாகும். வீட்டில் நீங்கள் எதையாவது உடைத்துவிட்டால், அதைப் பழுதுபார்க்க ஆகும் செலவை ஏற்றுக்கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம். ஆனாலும், காலப்போக்கில் ஏற்படும் தேய்மானம் காரணமாக பிரச்சனை எழுந்தால் அல்லது வீடு குறைந்தபட்ச தரநிலைகளுக்கு இணங்க இல்லாமல் இருந்தால், பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்கு ஆகும் செலவுகளுக்கு உங்கள் நில உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.

எப்படியிருந்தாலும், ஏதாவது உடைந்துவிட்டாலோ அல்லது வீடு நன்றாகப் பழுதுபார்க்கப்படவில்லை என நீங்கள் கருதினாலோ, முடிந்தவரை விரைவில் உங்கள் முகவரை எழுத்துப்பூர்வமாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

நான் எவற்றுக்கெல்லாம் பழுதுபார்ப்புகளுக்காக கோரலாம்?

வீட்டில் ஏதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது உடைந்துவிட்டாலோ, அதைப் பழுதுபார்த்துத் தருமாறு முகவரிடம் அல்லது நில உரிமையாளரிடம் நீங்கள் கேட்கலாம். வீட்டில் நீங்கள் ஏதாவது சேதம் விளைவித்துவிட்டாலும் கூட, அவர்கள் தான் அதைப் பழுதுபார்த்துத் தர வேண்டும். ஆனால், பழுதுபார்ப்பதற்கு ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட சில வகையான பழுதுபார்ப்புகள் சட்டத்தின் கீழ் ”அவசர பழுதுபார்ப்புகள்” எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் உள்ளடங்குவன:

  • அடைத்துக்கொண்ட அல்லது உடைந்த கழிவறை அமைப்பு
  • கடுமையான கூரைக் கசிவு அல்லது வெள்ளப் பெருக்கு
  • வாயுக் கசிவு
  • அபாயகரமான மின் கோளாறு
  • கடுமையான புயல் அல்லது தீ விபத்து காரணமாக ஏற்படும் சேதம்
  • நில உரிமையாளரால் அல்லது முகவரால் வழங்கப்படுகின்ற, சுடுநீர், தண்ணீர், சமையல், சூடாக்குதல் அல்லது சலவை செய்தல் போன்ற, ஏதாவது அத்தியாவசிய சேவை அல்லது சாதனத்தின் செயலிழப்பு அல்லது பழுதடைதல்
  • Rental Minimum Standards-ஐ மீறுதல் - இதில் கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட தரநிலைகள் உள்ளடங்கும்.

Rental Minimum Standards என்பது உங்கள் வீட்டில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை போன்ற பொருள்கள் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது:

  • வெளிப்புறக் கதவுகளில் செயல்படும் முட்டுக்கட்டைகள் இருக்க வேண்டும்
  • வெளிப்புற சன்னல்கள் பூட்டக்கூடியதாக இருக்க வேண்டும் மற்றும் மூடக்கூடிய, வெளிச்சம் உள்ளே வராமல் தடுக்கக்கூடிய, அந்தரங்கப் பாதுகாப்பு வழங்குகின்ற மறைப்புகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
  • முக்கிய வாழும் பகுதியில் செயல்படும் நிலையான ஹீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
  • வேலை செய்யும் கழிவறைகள்
  • குளியலறைகளில் குளிர் நீர் மற்றும் சுடுநீர் இணைப்புகள் இருக்க வேண்டும் மற்றும் அங்கு கழுவும் தொட்டி மற்றும் ஒரு ஷவர் / குளியல் தொட்டி இருக்க வேண்டும்
  • குளியலறை மற்றும் சலவையகத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும்
  • சமையலறைகள் முறையான உணவுத் தயாரிப்புப் பகுதி, குளிர் நீர் மற்றும் சுடு நீர் இணைக்கப்பட்ட கழுவும் தொட்டி மற்றும் குறைந்தபட்சம் 2 பர்னர்கள் கொண்ட செயல்படும் ஸ்டவ் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
  • வீடு உறுதியான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் கட்டிட அமைப்பினால் ஏற்படும் பூஞ்சை மற்றும் ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும்

அவசரமான அல்லது அவசரம் இல்லாத பழுதுபார்ப்புகள் ஏதாவது மேற்கொள்ள வேண்டியிருக்கின்றதா என உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், அந்தப் பிரச்சனையைப் பற்றிய கூடுதல் விவரங்களை எங்களுக்குக் கூறினால் அது எது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.

Emailing your agent or landlord
சேதத்தை நான் எவ்வாறு சரிசெய்ய முடியும்?

ஓர் உகந்த சூழலில், பிரச்சனைகளைப் பற்றி நில உரிமையாளரிடம் நீங்கள் தெரிவித்தவுடன் முடிந்தவரை விரைவில் நில உரிமையாளர் அதைச் சரிசெய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனாலும், பிரச்சனையைப் பற்றி நீங்கள் அவர்களிடம் சொல்லிய பின்னரும் எதுவும் செய்யப்படவில்லை என்றால், அந்தப் பழுதுபார்ப்பை முடித்துத் தருமாறு கோரி நில உரிமையாளருக்கு நீங்களே நேரிலோ அல்லது ஒரு வழக்கறிஞர் மூலமாகவோ ஒரு முறையான கடிதம் அனுப்பலாம்.

பழுதுபார்ப்புகளை முடித்துத் தருமாறு நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக மட்டுமே உங்களைக் காலி செய்ய அல்லது உங்கள் வாடகைக் கட்டணத்தை உயர்த்த நில உரிமையாளருக்கு உரிமை இல்லை. ஆனாலும், சில நில உரிமையாளர்கள் அவ்வாறு செய்வதற்கு முடிவெடுக்கலாம் (அவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்றாலும் கூட). அவ்வாறான சூழ்நிலைகளில், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நீங்கள் VCAT-க்குச் செல்ல வேண்டியிருக்கும்.

பழுதுகளைச் சரிசெய்ய வாடகைதாரர்களுக்கு உதவுவதற்காக Anika Legal இலவச சேவையை வழங்குகிறது. நீங்கள் நில உரிமையாளரைத் தொடர்புகொள்ள முயற்சித்த பின்னரும் கூட உங்கள் வீட்டில் உள்ள பழுது சரிசெய்யப்படவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.

எனது வீடு பழுதுபார்த்துத் தரப்படும் வரை வாடகை தருவதை நான் நிறுத்த முடியுமா?

அப்படிச் செய்ய முடியாது! நீங்கள் வாடகை தருவதை நிறுத்தி குறைந்தபட்சம் 14 நாள்கள் ஆகியிருந்தால், உங்கள் நில உரிமையாளர் உங்களுக்கு ‘காலி செய்யும் அறிவிப்பு’ வழங்குவதன் மூலம் காலி செய்யும் நடைமுறையைத் தொடங்க முடியும். எனவே, உங்கள் குளியலறையில் தண்ணீர் தேங்கி நின்றாலும், சன்னல்கள் உடைந்திருந்தாலும், அல்லது பறவைக் கூட்டம் உங்கள் வீட்டின் கூரையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாலும் கூட, உங்கள் வாடகையை எப்போதும் செலுத்திவிட வேண்டும்.

ஆனாலும், நில உரிமையாளர் பிரச்சனைகளைச் சரிசெய்யும் வரை வாடகைத் தொகையை அவர் எடுக்க முடியாத அளவுக்கு வேறொரு கணக்கில் அந்த வாடகையை நீங்கள் செலுத்தலாம். இதற்காக குறிப்பிட்ட சில படிநிலைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும், இதைச் செய்வதற்கான வழிமுறையில் நாங்கள் உங்களுக்கு உதவுவோம். தொடங்குவதற்கு இன்றே எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Remember to take photos of everything

Anika Legal பின்வரும் நிகழ்வுகளில் சட்ட ரீதியான உதவி வங்க முடியும்:

  • உங்கள் வீட்டில் பழுதுபார்ப்பு மேற்கொள்ள வேண்டியிருந்து நீங்கள் இதுவரை VCAT-க்கு விண்ணப்பிக்காமல் இருந்தால்
  • உங்கள் நில உரிமையாளர் VCAT-க்கு விண்ணப்பித்த பிறகு பத்திரத் தொகை தகராறு காரணமாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்.

நீங்கள் தகுதியுடையவரா எனப் பார்க்க எங்கள் 10-நிமிட கேள்விப்பட்டியலை பூர்த்தி செய்யவும்.

Anika-legal-leadership-team

We last updated this page in March 2023. Please remember that this is only legal information. If you're thinking about taking action, you should chat to a lawyer for advice about your situation first.

How useful was this content?